தற்போது, இந்த படம் சல்மான் கான், ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்க ஹிந்தியிலும் ரீமேக்காகி வருகிறது. ஜுலை மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதனிடையே ‘கிக்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தெலுங்கில் தயாரிப்பது பற்றி பல செய்திகள் உலவி வந்தன. கடைசியாக அப்படம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரவி தேஜாவே இந்த இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடிக்கப் போகிறார். சுரேந்தர் ரெட்டி இயக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாக உள்ளது.
‘கிக் 2’ படத்தின் ஹீரோயினாக யார் நடிப்பார்கள், படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்பது பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. இந்த படத்தின் கதை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் புது கதையாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி