இவர் சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இப்படி ஒரு படத்தை எடுக்கப் போகிறோம் என்று ரஜினிகாந்திடம் சொன்னதுமே அவர் உடனடியாக சம்மதம் தெரிவித்து விட்டாராம். அவர் இந்த படத்தைப் பாரக்க மிகவும் ஆர்வமாக உள்ளார். படம் வெளியானதும் நாம் இருவரும் சேர்ந்து படத்தைப் பார்க்கலாம் என ரஜினி சொன்னார்.என்கிறார் ராஜ் பகதூர்.
இந்த படத்தில் ரஜினி கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்பதை சஸ்பென்சாகவே வைத்துள்ளார்களாம். ரசிகர்கள் திரையரங்குக்கு வந்து பார்த்தால்தான் ரஜினி கதாபாத்திரத்தில் யார் நடித்துள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியுமாம்.
படத்தில் ரஜினிகாந்தைப் பற்றிய புகைப்படங்களோ, அவர் சம்பந்தமான எந்தவித காட்சிகளோ இடம் பெறவில்லை. பல ஆண்டுகளாக ரஜினிகாந்துக்கும், ராஜ் பகதூருக்கும் இடையிலான நட்பு எப்படி இருக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தை ருஷி என்பவர் இயக்குகிறார். படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
ரஜினிகாந்த், நடிகராக நடித்த ‘குசேலன்’ திரைப்படம் இதே போன்று ஒரு நடிகருக்கும், அவருடைய பால்ய கால நண்பனுக்கும் இடையிலான கதையாகத்தான் வெளிவந்தது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியை அந்தப் படம் பெறவில்லை. இருப்பினும் ராஜ் பகதூர் இந்த புதிய படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி