சர்க்கஸ் மினி பஸ்சில் முன்பக்கம் பாதுகாப்பான முறையில் முதலையும், பின்பக்கம் ஊழியர்கள் இருந்தனர். பேருந்து ரஷ்யாவில் உள்ள முர்மான்ஸ்க்கில் இருந்து செவரோமோர்ஸ்க் என்ற பகுதிக்கு மிக வேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த சுவரில் மோதியது.இந்த விபத்தில் பேருந்தின் உள்ளே உட்கார்ந்திருந்த சர்க்கசின் கணக்காளர் சீட் பெல்ட் அணியாததால் தூக்கி வீசப்பட்டார்.
இவர் 120 கிலோ எடையுள்ள ஒரு குண்டு பெண். இவர் மிகச்சரியாக அவர் தூங்கிக்கொண்டிருந்த முதலையின் மீது விழ்ந்ததால் முதலைக்கு படுகாயம் ஏற்பட்டது. தொடர்ந்து மூன்று மணிநேரமாக முதலைக்கு வாந்தி ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் விலங்குகள் மருத்துவமனையில் அந்த முதலை அனுமதிக்கப்பட்டுள்ளது.முதலையின் உள்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்த குண்டு பெண்ணுக்கு சிறிய காயமே ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி