இந்த நட்சத்திரத் தம்பதியருக்கு அகில் என்ற ஒரே ஒரு மகன் இருக்கிறார். அகில் குழந்தையாக இருக்கும் போதே ‘சுட்டிக் குழந்தை’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.அகில் விரைவில் தெலுங்குத் திரையுலகில் நாயகனாக அறிமுகமாக உள்ளார். சமீபத்தில் வெளிவந்த ‘மனம்’ திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அகில் நடித்திருந்தார்.கடந்த சில வருடங்களாகவே பல இயக்குனர்கள் அகிலை அவர்களது படங்களில் நாயகனாக நடிக்க வைக்க நாகார்ஜுனாவை அணுகினர். ஆனால், நாகார்ஜுனா இன்னும் கொஞ்சம் காலம் போகட்டும் என்று பதிலளித்திருந்தார்.
தற்போது, தேவா கட்டா என்ற இயக்குனர் நாகார்ஜுனாவை சந்தித்து ஒரு கதை சொல்லியிருப்பதாகவும், அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்து அகிலை நடிக்க வைக்க சம்மதித்துள்ளதாகவும் தெரிகிறது. இயக்குனர் தேவா தற்போது கதை விவாதத்தில் இருக்கிறார். அது முடிந்ததும் முழு கதையையும் சொல்லி ஓகே வாங்கிவிடுவார் என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி