சென்னை:-நேரம் படம் மூலம் தமிழில் நடிகை நஸ்ரியா அறிமுகமானார். ஆர்யாவுடன் ராஜா ராணி, தனுசுடன் நய்யாண்டி படங்களில் நடித்தார். தற்போது ஜெய் ஜோடியாக திருமணம் எனும் நிக்கா படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
இதுவே அவருக்கு கடைசி படம் என்று நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இனிமேல் படங்களில் நடிக்க மாட்டார் என்றும் தெரிவித்தனர்.நஸ்ரியாவுக்கும் மலையாள நடிகர் பர்ஹத் பாசிலுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. ஆகஸ்டில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளது. இது காதல் திருமணம் ஆகும்.
திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது என்று பர்ஹத்பாசில் குடும்பத்தினர் நிபந்தனை விதித்துள்ளார்களாம். எனவேதான் சினிமாவுக்கு அவர் முழுக்கு போடுவதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி