பிரபுசாலமன் இயக்கத்தில் அவர் நடித்த மைனா அவர் மீது விழுந்திருந்த ஆபாச நடிகை என்ற இமேஜை மாற்றியது.இந்நிலையில் அனகா என்று வைத்திருந்த தனது பெயரையும் பின்னர் அமலாபால் என்று மாற்றிக்கொண்டவர், தெய்வத்திருமகளில் விக்ரம், வேட்டையில் ஆர்யா, காதலில் சொதப்புவது எப்படியில் சித்தார்த், தலைவாவில் விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையானார்.அதன்பிறகு தனுஷ், ஜெயம்ரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த, அமலாபால் இன்னும் 3 வருடத்திற்கு சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார்.எதிர்பாராதவிதமாக தனது காதலர் டைரக்டர் விஜய்யை ஜூன் 12ம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டதால், புதிதாக சைன் பண்ணியிருந்த சில படங்களில் இருந்து விலகி விட்டார்
அமலாபாலின் கடைசி படமாக அவரது தாய் மொழியான மலையாளத்தில் நடித்து வந்த மிலி படம் அமைந்திருக்கிறது. இந்த படம் அமலாபாலுக்கு பெரிய திருப்தியாக அமைந்திருக்கிறதாம். காரணம், இந்த படத்தில் டைட்டில் ரோலில் நடிப்பதோடு, நல்ல குடும்ப பின்னணியில் நடக்கும் கதைக்களமாம். அதனால், தனது கடைசி படம் தன்னை பெருமைப்படுத்தும் விதமாக அமைந்திருப்பதாக கூறுகிறார் அமலாபால்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி