விக்ரமன் படத்திலேயே பல கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்த நிறுவனம், இந்த படத்திலாவது நாலு காசு சம்பாதிக்கலாம் என்று பார்த்தால் அதற்கு தினேஷ் தடையாக இருந்திருக்கிறாராம்.எப்போதோ வெளிவர வேண்டிய படம்தான் ‘வாராயோ வெண்ணிலாவே’. ஆனால், இடையில் ‘குக்கூ’ படத்தில் நடிக்க ஆரம்பித்து இந்த படத்தின் படப்பிடிப்புக்கு தினேஷ் வராமலே போய்விட்டாராம். குக்கூ படம் எப்படியும் வெற்றியைக் குவித்து விடும் கோடிகளில் சம்பளத்தை உயர்த்தி விடலாம் என்று நினைத்தவருக்கு அந்த படம் குப்புற விழுந்துவிடவே இப்போது தவிக்கிறாராம்.
சினிமாவைப் பொறுத்தவரை எந்த படம் ஓடும், எந்த படம் ஓடாது என்று யாராலும் கணிக்க முடியாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்தான். வளர்ந்து வரும் நேரத்தில் அட்டகத்தி தினேஷின் இந்த ஆட்டம், அவருக்கே ஆபத்தாக முடியும் என்கிறார்கள் இப்படித்தான் இதற்கு முன் சில ஹீரோக்கள் ஓடும் என்று நினைத்த படங்கள் ஓடாமல் போனதும், ஓடாது என்று நினைத்த சில படங்கள் வெற்றிகரமாக ஓடியதையும் அவர்கள் நினைவு கூறுகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி