தெருவோரம் அடிபட்டு கிடந்த நாய்க்குட்டியை எடுத்து வந்து வளர்த்தார். அத்துடன் தெருநாய்களை பிடித்து வந்து குளிப்பாட்டி தத்து கொடுக்கவும் செய்தார். பிராணிகள் பாதுகாப்பு அமைப்பிலும் பொறுப்பு வகித்து செயல்பட்டு வருகிறார்.
தற்போது இதற்கெல்லாம் மேலாக தனது உடல் உறுப்புகளையே தானம் செய்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
இறந்த பிறகு எனது கண், இருதயம், கிட்னி, நுரையீரல், கல்லீரல், கணயம் போன்றவற்றை எடுத்து மற்றவர்கள் சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பத்திரம் எழுதி கையெழுத்திட்டு கொடுத்துள்ளார்.உடல் உறுப்புகளை தானம் செய்த திரிஷாவை சக நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் பாராட்டினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி