இந்த படத்தின் சில காட்சிகள் மைசூர் மகாராஜா அரண்மனையில் படமாக்க தற்போது சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்புவரை அனுமதி தர மறுத்து வந்த மைசூர் அரண்மனை நிர்வாகிகள் தற்போது திடீரென அனுமதி வழங்கியதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒரு காரணம் மத்தியில் ஆட்சி மாறியது என்பது.மைசூர் அரண்மனையின் சில முக்கிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்ததோடு அல்லாமல், மகாராஜா பயன்படுத்திய தங்கத்தில் ஆன அறை ஒன்றிலும் படப்பிடிப்பு நடத்த அரண்மனை நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது. ஹாலிவுட் பட இயக்குனர்கள் கேட்டும் அனுமதி கொடுக்காத அரண்மனை நிர்வாகம் ரஜினி படத்திற்கு அனுமதி கொடுத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.
ஆனால் மகாராஜா பயன்படுத்திய அறைக்குள் செல்ல நான்கு நபர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதால், ரஜினி, அனுஷ்கா, கே.எஸ்.ரவிகுமார் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகிய நான்கு பேர் மட்டுமே தங்கத்தில் ஆன அறையில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.லிங்கா படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்க உள்ளது.இந்தபடத்தில் ரஜினி ஜோடியாக இங்கிலாந்து நடிகை லூரன் ஜெ இர்வின் நடிக்கிறார். ரஜினி இப்படத்தில் இருவேடங்களில் நடிக்கிறார். சுதந்திர போராட்டத்துக்கு முந்தைய காலகட்டத்திலும் தற்போதைய காலத்திலும் நடபபது போல் திரைக்கதை அமைக்கபட்டு உள்ளது.
லூரன் ஏற்கனவே ஹார்ட் உள்ளிட்ட சில இங்கிலாந்து படங்களில் நடித்துள்ளார். வேகரி என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். ரஜினியும் லூரனும் நடித்த காட்சிகள் மைசூர் அரண்மனையில் இருவாரங்களாக படமாக்கப்பட்டுள்ளது.ரஜினி மற்றும் கே.எஸ் ரவிக்குமாருடன்பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்று லூரன் கூறியுள்ளார்.ரஜினி நடித்த கோச்சடையான் படத்தையும் தியேட்டரில் சென்று பார்த்துள்ளார். அப்போது ரசிகர்கள் ஆரவாரத்தை கண்டு சிலிர்த்து போனாராம்.
லிங்கா படம் மூலம் இந்திய பங்களில் நடிக்க வாய்ப்புகள் கிட்டும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி