சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் டுவிட்டரில் இணைந்தார். இவர் இணைந்த 24 மணிநேரத்தில் சுமார் 2.25 லட்சம் பேர் அவரை பாலோ பண்ண தொடங்கினர். தற்போது வரை சுமார் 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் அவரை பாலோ செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினி டுவிட்டரில் இணைந்ததற்கு முக்கிய காரணமே பிரதமர் மோடி தானாம்.
தேர்தலுக்கு முன்பாக பிரசாரம் செய்வதற்காக தமிழகம் வந்தார் மோடி. அப்போது நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின் போது இருவரும் நிறைய விஷங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது தான் மோடி, ரஜினியை டுவிட்டரில் சேர சொல்லியிருக்கிறார். மோடியின் அறிவுறுத்தலாலேயே ரஜினி டுவிட்டரில் சேர்ந்துள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி