செய்திகள் தெருவை சுத்தம் செய்ய கூலி மது!…

தெருவை சுத்தம் செய்ய கூலி மது!…

தெருவை சுத்தம் செய்ய கூலி மது!… post thumbnail image
ஜெர்மனி:-பெருகி வரும் மக்கள் தொகையால் தெருக்களில் தினமும் டன் கணக்கில் குப்பைகளும், கழிவுப்பொருட்களும் தேங்குகின்றன. இவற்றை அப்புறப்படுத்துவது நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு குப்பைகளை அகற்றி தெருக்களை சுத்தப்படுத்துவதற்கு ஜெர்மனி நகரம் ஒன்று, ஜூன் மாதம் முதல் வித்தியாசமான நடவடிக்கை ஒன்றுக்கு திட்டமிட்டுள்ளது.

ஜெர்மனியின் மேற்கு பகுதியை சேர்ந்த அந்த நகரம், அறக்கட்டளை நிறுவனம் மூலம் அங்குள்ள வேலையில்லாத மதுபிரியர்கள் மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு இதற்காக அழைப்பு விடுத்தது.அதாவது தினந்தோறும் 3 முதல் 6 மணி நேரம் வரை தெருக்களை சுத்தம் செய்தால், அவர்களுக்கு ‘பீர்’, உணவு, மருத்துவ வசதி போன்றவை இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இது பொறுப்பற்ற மக்களை சுரண்டக்கூடிய திட்டம் என பொதுமக்கள் கூறியுள்ளனர்.ஆனால் இத்திட்டம் மூலம், மது பிரியர்களின் ஒவ்வொரு நாளையும் அர்த்தமுள்ள விதத்தில் மாற்ற முடியும் என அந்த அறக்கட்டளை கூறியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி