செய்திகள்,தொழில்நுட்பம் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் பழுதை சரி செய்த ரோபோ!…

சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் பழுதை சரி செய்த ரோபோ!…

சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் பழுதை சரி செய்த ரோபோ!… post thumbnail image
டொரண்டோ:-அமெரிக்கா, கனடா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு கூடம் அமைத்து வருகின்றனர். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அங்கு ‘ஷிப்ட்’ முறையில் விண்வெளி வீரர்கள் சென்று கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆய்வு கூடத்தில் உள்ள ஒரு கேமராவில் பழுது ஏற்பட்டது.அதை கனடாவில் தயாரிக்கப்பட்ட ‘ரோபோ’ மூலம் சரி செய்துள்ளனர். அந்த ‘ரோபோ’வின் உயர் டெக்ஸ்டா ஆகும்.

அந்த ரோபோ விண்வெளியில் நடந்து சென்று கேமராவில் பழுதடைந்திருந்த கனடரம்–2 என்ற பாகத்தை அகற்றிவிட்டு புது கருவியை பொருத்தியது.இது ஒரு புதிய சாதனையாக கருதப்படுகிறது. ஏனெனில் இது போன்ற பழுதுகளை விண்வெளியில் நடந்து சென்று வீரர்கள்தான் சரி செய்வார்கள். தற்போது இது போன்ற ரோபோக்களால் விண் வெளியில் வீரர்கள் நடப்பது குறையும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி