செய்திகள்,திரையுலகம் பிறந்தநாளில் உடல் உறுப்புகளை தானம் செய்யும் நடிகை!…

பிறந்தநாளில் உடல் உறுப்புகளை தானம் செய்யும் நடிகை!…

பிறந்தநாளில் உடல் உறுப்புகளை தானம் செய்யும் நடிகை!… post thumbnail image
சென்னை:-மிருகம், குசேலன், குரு என் ஆளு, அழகர் மலை உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்தவர் நடிகை சோனா. ‘கனிமொழி’ என்ற படத்தை தயாரித்தும் உள்ளார். இவரைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி கோடம்பாக்கத்தில் அவ்வப்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.

சமீபத்தில் இவர் தனது வாழ்க்கையை புத்தகமாகவும், திரைப்படமாகவும் வெளியிடப்போவதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.வருகிற ஜூன் 1ம் தேதி இவர் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ஏதாவது ஒரு நலத்திட்டங்களை செய்து வரும் சோனா, இந்த ஆண்டு தனது பிறந்தநாளில் தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்யவுள்ளாராம். மக்களிடையே உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே சோனா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி