சென்னை:-நடிகை சுவாதி சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் இடம் பெற்ற கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் பாடல் மூலம் சுவாதி தமிழ் ரசிகர்கள் மத்தியில் வலுவான இடம் பிடித்தார்.
போராளி, இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘அமளிதுமளி’, வடகறி படங்களில் நடித்து வருகிறார்.படப்பிடிப்பில் தொழில் அதிபர் ஒருவர் அடிக்கடி சுவாதியை சந்திப்பதாகவும் இருவரும் காதலிப்பதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து சுவாதியிடம் கேட்டபோது மறுத்தார். தொழில் அதிபருடன் காதல், திருமணம் என்றெல்லாம் என்னைப் பற்றி வரும் செய்திகள் வதந்திகள்தான் யாரையும் காதலிக்கவில்லை. திருமணமும் இப்போது இல்லை. என் முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி