அதோடு, இப்படத்தில் நடித்து முடித்தபோது புற்றுநோய் பாதிப்பினால் படுத்த படுக்கையாக இருந்தார் நாகேஸ்வரராவ். இருப்பினும் தன்னை டப்பிங் தியேட்டருக்கு கொண்டு செல்ல வைத்து, தனது சொந்த குரலிலேயே தனக்கு டப்பிங் பேசினார் நாகேஸ்வரராவ். அதையடுத்து அவர் இறந்து விட்டார். அந்த அளவுக்கு தனது வாழ்க்கையின் கடைசி நிமிடங்கள் வரை சினிமாவுக்காகவே தன்னை அர்ப்பணித்திருக்கிறார் நாகேஸ்வரராவ்.
அதையடுத்து, மனம் படத்தின் அனைத்துக்கட்ட வேலைகளும் முடிவடைந்த நிலையில் படம் வெளியானது. அப்போது ஆந்திராவிலுள்ள ரசிகர்களைப்போலவே, நடிகர்,நடிகைகளும் அந்த படத்தை ஆவலுடன் சென்று பார்த்தவர்கள், இணையதளங்களில் அப்படத்தின் சிறப்புகளை பக்கம் பக்கமாக புகழ்ந்து தள்ளி வருகின்றனர். திரையிட்ட இடமெல்லாம் படம் சக்கை போடு போட்டு வெற்றி வாகை சூடிக்கொண்டிருக்கிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி