‘கல்பனா ஹவுஸ்’ படத்தின் கதை பற்றி டைரக்டர் குமார் சொல்கிறார்:–பிரபல என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரி தனது குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்காக காட்டுக்குள் இருக்கும் விருந்தினர் மாளிகையில் வந்து தங்குகிறார். அங்கு சில மர்மமான சம்பவங்கள் அவர்களை பயமுறுத்துகின்றன. போலீஸ் அதிகாரியின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள்.
இதற்கு காரணம் அந்த பங்களாவில் இறந்துபோன ஒரு பெண்ணின் ஆவிதான் என்கிறார்கள். அதைக்கண்டுபிடிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுகிறார்கள். அவர்கள் உயிர் பிழைத்தார்களா? அல்லது ஆவியினால் பழிவாங்கப்பட்டார்களா? என்பதே கதை.தரண் மூவிஸ் சார்பில் ஆர்.நாகராஜன் தயாரித்து வருகிறார். படத்தில் பரபரப்பும், விறுவிறுப்பும் குறையாமல் இருப்பதற்காக, பாடல்களே இல்லாத படமாக இது தயாராகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி