நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தான் தற்போது கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் புதுமுகங்கள் லீடிங் ரோல்களில் நடிக்க விஜய் சேதுபதி, ஆர்யா, அமலாபால் என்று முன்னணி நட்சத்திரங்களையும் கொஞ்ச நேரம் வந்துட்டுப் போறது என்கிற கணக்கில் அழைத்து நடிக்க வைத்திருக்கிறாராம். கொஞ்ச நேரம் என்றாலும் படத்துக்கே திருஷ்டி போடுவதுபோல மார்க்கெட்டிங் தந்திரத்தையும் இவர்களையே வைத்தே செய்திருக்கிறார் பார்த்திபன்.
சமீபத்தில் கோவையில் நடந்த இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது ஆர்யாவுக்கும், அமலாபாலுக்கும் திருமணம் நடப்பதுபோல ஒரு காட்சியை எடுத்து அதனை ஒரேயொரு பிட்டு நியூஸாக பரப்பிவிட்டார்.. அது அன்றைக்கே பத்திக் கொண்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி