ஜெருசலேம்:-மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப் பயணம் செய்துவரும் போப் பிரான்சிஸ், ஜெருசலேம் நகரை சென்றடைந்தார்.அங்குள்ள இஸ்லாமிய வழிபாட்டு தலம் மற்றும் யூதர்களின் வழிபாட்டு தலம் ஆகியவற்றை தரிசித்த அவர் அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
அன்பு சகோதரர்களே..நாம் ஒருவரையொருவர் சகோதர, சகோதரிகளாக கருதி மதிப்பளித்து, அன்பு செலுத்துவோமாக!.மற்றவர்களின் வலியை புரிந்துக் கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும். கடவுளின் பெயரால் வன்முறையை யாரும் பயன்படுத்த கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி