பிரான்ஸ்:-பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு கேன்ஸ் பட விழாவில் நாய்கள் தொடர்பான திரைப்படங்கள் அதிக அளவில் திரையிடப்பட்டன. இதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நாய்க்கு பாம் டாக் என்னும் உயரிய விருதும் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான பாம் டாக் விருது அங்கேரிய டைரக்டர் கோர்னெல் முண்ட்ருசோ இயக்கிய பெஹர் இஸ்டென் என்ற படத்தில் நடித்த லேப் ராடர் ரகத்தை சேர்ந்த ’பாடி’ என்னும் நாய்க்கு கிடைத்தது. பாடிக்கான விருதை அறிவித்த போது அந்த நாய் அழகாக அலங்கரிக்கப்பட்டு மேடைக்கு கொண்டு வரப்பட்டது.
அப்போது அதன் கழுத்தில் டையும் அணிவிக்கப்பட்டு இருந்தது. நாயின் சார்பில் விருதை படத்தின் டைரக்டர் கோர்னல் முண்ட்ருசோ பெற்றுக்கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த நாய் அபிமானிகளும், திரைப்பட விமர்சகர்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி