ஏற்கனவே காதல் தோல்வியில் மனம் வாடி இருந்த ஹன்சிகா. இனி மேல் முழுக்க சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்று அறிவித்து ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கிறார்.
இத்துடன் சமூக சேவை பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஏழை குழந்தைகளை தத்தெடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதுவரை 25 குழந்தைகளை தத்து எடுத்து இருக்கிறார். அந்த குழந்தைகளுக்கு உணவு, உடை, தங்குமிடம், படிப்பு செலவு எல்லாவற்றையும் தானே கவனித்துக் கொள்கிறார். அடுத்த கட்டமாக பிள்ளைகளால் ஒதுக்கப்படும் முதியவர்களை வைத்து பராமரிக்க முதியோர் இல்லம் ஒன்றும் கட்டுகிறார். ஹன்சிகாவின் இத்தகு பணிகளை சக நடிகர், நடிகைகள் பாராட்டுகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி