புதுடெல்லி :- காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 3-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியில் 5 முறை சாம்பியனும், ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் கைப்பற்றியவருமான மேரிகோமுக்கு இடம் கிடைக்கவில்லை.
3-வது குழந்தையை பெற்றெடுத்த பிறகு ஏறக்குறைய 2 ஆண்டுகள் ஓய்வில் இருந்த மேரிகோம் பாட்டியாலாவில் மூன்று நாட்கள் நடந்த அணித்தேர்வுக்கான பயிற்சியில் கலந்து கொண்டார். இதில் 51 கிலோ எடைப்பிரிவில் களம் இறங்கிய மேரிகோம், ஆக்ரோஷமாக ஆடிய பிங்கி ஜங்க்ராவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றதால் வாய்ப்பை இழந்தார்.
இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணிக்கு பிங்கி ஜங்க்ரா, எல்.சரிதா தேவி (60 கிலோ), பூஜா ராணி (75 கிலோ) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி