சென்னை:- சமஸ்கிருதத்தை மொழி பாடமாக எடுத்து படித்த மதுரையை சேர்ந்த துர்க்கா தேவி 500–க்கு 500 மதிப்பெண் பெற்றார். அவர் அங்குள்ள டி.வி.எஸ். மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்து வருகிறார்.
பிரெஞ்சை மொழி பாடமாக எடுத்து 2 பேர் 500–க்கு 500 மதிப்பெண் பெற்றுள்ளனர். சென்னை முகப்பேர் கிழக்கில் உள்ள வேலம்மாள் பள்ளியில் படித்த ஹேமாவர்ஷினி பிரெஞ்சை மொழிப்பாடமாக எடுத்து 500 மதிப்பெண் பெற்றார்.
இதே போல கோவை பீளமேடு ஜி.ஆர்.ஜி.எம். பள்ளியில் படிக்கும் விஜய மூர்த்தி என்ற மாணவர் பிரெஞ்சை மொழி பாடமாக எடுத்து 500 மதிப்பெண் பெற்றார். இந்த 3 பேரும் பிறமொழி பாடத்தில் 500 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி