எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வு ஜூன் 23–ந்தேதி தமிழ் முதல் தாள், 24–ந் தேதி தமிழ் இரண்டாம் தாள், 25–ந் தேதி ஆங்கிலம் முதல் தாள், 26–ந் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள், 27–ந் தேதி கணிதம், 28–ந் தேதி அறிவியல், 30–ந் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடக்கிறது. தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் இன்றே வினியோகம் செய்யப்பட்டது. மற்றவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
எந்தவொரு பாடத்துக்கும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 26–ந்தேதி முதல் 31–ந்தேதி மாலை 5 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும், தனி தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி