சென்னை:-பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டர் தளத்தில், ரஜினிகாந்த் அவர்களிடம் எனக்கு பிடித்ததே அவரது மார்புதான். அதை ஏன் அவர் அனிமேஷனில் விரிவடைய அனுமதித்தார் என்றே தெரியவில்லை.
கோச்சடையானில் ரஜினியின் மார்பு அனிமேஷனில் விரிவடைவதை நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.ராம்கோபால்வர்மாவின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முழுக்க முழுக்க மோஷன் கேப்ட்சர் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட படத்திற்கும் அனிமேஷனுக்கும் வித்தியாசம் தெரியாமல் ராம்கோபால் வர்மா உளறுகிறார் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி