இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை மொராகோ நாட்டில் நடத்தியிருக்கிறார்கள். அங்கு தீவிரவாதிகள் சிலர் ஜீவாவை கடத்தி செல்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. இதையறிந்த அந்நாட்டு போலீஸார் உடனே படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்குச் சென்று படப்பிடிப்பை நிறுத்தியயோடு ஜீவா மற்றும் யான் படக்குழுவினர் அனைவரையும் கைது செய்தனர்.
காரணம், அந்த காட்சிகள் பார்ப்பவர்களின் மனத்தில் மொராகோ பற்றி ஒரு தவறான சித்தரிப்பு ஏற்படும் என்பதுதான். அதன் பிறகு எப்படியோ ஒருவழியாக போலீசிடம் இருந்து விடுபட்டு இந்தியா திரும்பியுள்ளனர் படக்குழுவினர். மேலும் மொராகோவில் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போன அந்த காட்சியை சென்னையிலே செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி