தனது முற்பிறவி பெயரை கூறிய சிறுவன் அப்பிறவியில் கோடாரியை கொண்டு ஒருவன் தன்னை தாக்கி கொன்றதாக தெரிவித்துள்ளான். தான் தங்கியிருந்த பகுதியை அந்த சிறுவன் கூற அவனை அந்த இடத்திற்கே மக்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற அவன் தான் வசித்து வந்த இடத்தை காண்பித்துள்ளான். அங்கிருந்த மக்கள் அந்த இடத்தில் வசித்து வந்தவன் நான்கு வருடங்களுக்கு காணாமல் போனதாக தெரிவித்தனர்.ஆனால் தான் கொல்லப்பட்டதாக தெரிவித்த சிறுவன் தன்னை கொன்றவனையும் அடையாளம் காட்டினான்.
ஆனால் அவன் தான் கொலை செய்யவில்லை என்று கூறிவந்தான். உடனே சிறுவன் தான் கொன்று புதைக்கப்பட்ட இடத்தையும் காண்பித்தான். அங்கிருந்து ஒரு ஆணின் மண்டை ஓடு மற்றும் கோடாரியும் கண்டெடுக்கப்பட்டது. கொலை குறித்து ஆதாரத்துடன் சிக்கியதால் கொலைகாரன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். இச்சம்பவம் சிரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி