ஐதராபாத்:-நடிகை ஸ்ருதி ஹாசனின் கவர்ச்சிப் படங்கள் சமீபகாலமாக இணையதளங்களில் உலா வருகின்றன. ‘எவடு’ என்ற தெலுங்கு சினிமா படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட இந்த படங்களில் ஆபாசமான கோணங்களில் ஸ்ருதி ஹாசன் காட்சியளிக்கிறார்.
மேற்கண்ட புகைப்படங்களை சிலர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் இணையதளங்களில் வெளியிட்டுள்ளதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐதராபாத் போலீசாரிடம் ஸ்ருதி ஹாசன் புகார் அளித்துள்ளார். இப்புகார் தொடர்பான மேல்விசாரணை சி.ஐ.டி. போலீசாரின் சட்டப்பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி