சென்னை:- ரஜினி யின் கோச்சடையான் படம் நாளை (23–ந்தேதி) உலகம் முழுவதும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 6 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடுகின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் வருகிறது. கோச்சடையான் ரிலீசை ரசிகர்கள் விழாவாக கொண்டாடுகிறார்கள். சென்னை கிண்டியில் இருந்து சைதை பகுதி ரசிகர்கள் மன்றத்தின் பொறுப்பாளர் சைதை ரவி மற்றும் நந்தம்பாக்கம் சண்முகபாண்டியன் தலைமையில் ரசிகர்கள் ஊர்வலமாக புறப்படுகின்றனர்.
இந்த ஊர்வலத்தில் நெல்லை உவரியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித ஜோதியை ரசிகர்கள் ஏந்தி செல்கின்றனர். கோச்சடையான் படம் வெற்றி பெற பிரார்த்தனை செய்து இந்த ஜோதி நெல்லையில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்னை கொண்டு வரப்படுகிறது.
ஊர்வலம் உதயம் தியேட்டரை சென்று அடைகிறது. இதில் சென்னை மாவட்ட நிர்வாகிகள் ராமதாஸ், சூர்யா, ரவி ஆகியோர் பங்கேற்கின்றனர். இறுதியில் புனித ஜோதி லதாரஜினி காந்திடம் ஒப்படைக்கப்படுகிறது. கோச்சடையான் ரிலீசையொட்டி உதயம் தியேட்டரில் ரஜினி ரசிகர்கள் 100 அடி நீள பேனர் அமைத்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி