சிவப்புக் கம்பள வரவேற்றின் போது, லி ஓரெல் பாரிஸ் அமைப்பின் தூதுவரான நடிகை ஐஸ்வர்யா, விலை உயர்ந்த கை வைக்காத கவுன் மாடல் உடை அணிந்து, சிவப்பு லிப்ஸ்டிக் மேக்கப், கண்களில் புருவத்துக்கு திருத்தமாக ஐ லைன் செய்து கொண்டு சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்ததார். இது அங்கிருந்த புகைப்படக் கலைஞர்களைப் பரவசப்படுத்தியது. அனைவரையும் கவர்ந்ததது.
வெளிநாட்டுப் புகைப்படக் கலைஞர்கள் ஐஸ்வர்யா ராய்யின் ஒய்யார நடையை தங்கள் கேமிராவை கொண்டு ஸ்டில்கள் எடுத்துக் கொண்டனர். ஐஸ்வர்யா குழந்தை பெற்றுக் கொண்ட பின்னர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி கொண்டார். 4 வயது குழந்தைக்கு தாயான ஐஸ்வர்யா முந்தைய நிகழ்சிகளைவிட தற்போது புதிய தோற்றத்தை ஏற்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி