அகமதாபாத்:-குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வரும் 26-ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளதால், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில், வருவாய்த்துறை மந்திரி ஆனந்திபென் பட்டேல் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
நீண்ட காலமாக பா.ஜனதா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஆனந்திபென், அரசியலுக்கு வருவதற்கு முன் ஆசிரியராக பணியாற்றினார். முதன் முதலில் 1998ம் ஆண்டு மண்டல் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட அவர் பின்னர் அமைச்சரவையில் இடம்பிடித்தார்.
கேசுபாய் பட்டேல் முதல்வராக இருந்தபோதும் அமைச்சராக இருந்தார். மோடியின் அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் இருந்த அவர் மோடியின் முழு நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி