செய்திகள்,திரையுலகம் ஏ.ஆர்.ரகுமான் வீட்டின் மீது தாக்குதல்!…

ஏ.ஆர்.ரகுமான் வீட்டின் மீது தாக்குதல்!…

ஏ.ஆர்.ரகுமான் வீட்டின் மீது தாக்குதல்!… post thumbnail image
லாஸ் ஏஞ்சல்ஸ்:-‘ஸ்லம் டாக் மில்லினர்’ படத்தில், ஆஸ்கார் விருது பெற்றதன் மூலம் ஏ.ஆர்.ரகுமான் உலகளவில் பிரபலமானார். தற்போது மில்லியன் டாலர் ஆர்ம் என்ற ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்து இருக்கிறார். இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீசாக உள்ளது.

ஹாலிவுட் பட வாய்ப்புகள் தொடர்ந்து வருவதால் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் வீடு வாங்கி இருக்கிறார். அமெரிக்கா செல்லும் போதெல்லாம் அந்த வீட்டில் தான் தங்குகிறார். இந்த வீடு மீது தாக்குதல் நடந்துள்ளது. இதனால் ஏ.ஆர்.ரகுமான் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தாக்கியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தனது வீடு தாக்கப்பட்டதை டுவிட்டரில் புகைப்படத்துடன் வெளியிட்டு உள்ளார் ஏ.ஆர்.ரகுமான், வீட்டு சுவரில் கறுப்பு வண்ணத்தில் கிறுக்கப்பட்டும் இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி