செய்திகள்,திரையுலகம் ரசிகர் மன்றத்தை கலைக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி!…

ரசிகர் மன்றத்தை கலைக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி!…

ரசிகர் மன்றத்தை கலைக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி!… post thumbnail image
கேரளா:-கேரளாவில் நடிகர் மம்முட்டிக்கு வலுவான ரசிகர் மன்றம் இருக்கிறது. மம்முட்டி படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் தியேட்டர்களில் கொடி தோரணங்கள் கட்டியும் கட் அவுட்டுகள் அமைத்தும் இவர்கள் அமர்க்களப்படுத்துவது உண்டு.

ஆனால் சமீப காலமாக ரசிகர் மன்றத்தினரின் நடவடிக்கைகள் மம்முட்டியை எரிச்சல்பட வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பேஸ்புக், டுவிட்டர்களில் பிற நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை மம்முட்டி ரசிகர் மன்றம் என்ற பெயரில் இவர்கள் வசை பாடுகின்றனர். டைரக்டர் உன்னிகிருஷ்ணனையும் கேவலமாக பேசி கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் மத ரீதியாகவும் மம்முட்டி பெயரை ரசிகர்கள் பலர் பயன்படுத்த துவங்கி உள்ளனர். கேரளாவில் திரையுகினர் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் சம்பாதித்து வைத்துள்ள நல்ல பெயர் ரசிகர்மன்றத்தினரின் இது போன்ற நடவடிக்கைகளால் கெட்டுவிடுமோ என மம்முட்டி அச்சப்படுகிறாராம்.எனவேதான் மன்றத்தை ஒரேயடியாக கலைத்து விட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி