லாஸ் ஏஞ்சல்ஸ்:-தி ஷில்டு,ஸ்டேட் ஆப் பிளே, சவுத் லேண்ட் , பாரஸ்ட் கேம்ப் உள்பட பல படங்களில் நடித்தவர் அமெரிக்க நடிகர் மைக்கேல் ஜேஸ்.இவரது மனைவி ஏப்ரல் ஜேஸ். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவரது வீடு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹடு பார்க் பகுதியில் உள்ளது.
கணவனுக்கும் மனைவிக்கு இடையே நடந்த சண்டையில் மைக்கேல் ஜேஸ் மனைவியை துப்பாக்கியால் சுட்டார் இதில் ஏப்ரல் ஜேஸ் அதே இடத்தில் பலியானார். ஏப்ரல் ஜேஸ் பைலோ பல்கலைகழகத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த சிலவருடங்களுக்கு முன் தான் தனது முந்தைய மனைவி ஜெனிபர் பிட்டர் மேனை மைக்கேல் ஜேஸ் விவாகாரத்து செய்தார் எனபது குறிப்பிடதக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி