இப்போது இன்னொரு படத்திலும் அவர் ஆடப்போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஜெயங்கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை படங்களை இயக்கிய கண்ணன் தற்போது இயக்கி வரும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இதில் ஒரு ராஜாவாக விமலும், இன்னொரு ராஜாவாக சூரியும் நடிக்கிறார்கள்.
எதற்கெடுத்தாலும் போட்டியில் குதிக்கும் இவர்கள் ஒரு நாள் இண்டர்நெட்டில் சன்னியின் நீலப்படத்தை பார்க்கிறார்கள். அவரை ஊர் திருவிழாவில் ஆட வைக்கிறேன் என்று சவால் விடுவாராம் சூரி. எங்கள் ஊரில் ஆட வைக்கிறேன் என்ற சவால் விடுவாராம் விமல்.
இருவரும் போட்டிபோட்டு அழைக்க இரு ஊரிலும் குத்தாட்டம்போட்டுவிட்டு பணத்தை வாங்கிச் செல்வாராம் சன்னி. இப்படி ஒரு பாட்டு சூழ்நிலையில், சன்னி விமல், சூரி இருவருடனும் ஆடுவதாக பேசப்படுகிறது. இதற்காக சன்னிக்கு 30 லட்சம் வரை சம்பளம் பேசப்படுவதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி