சரவணன் என்கிற சூர்யா 2014ம் ஆண்டு வெளியாகவிருக்கும் தமிழ் திரைப்படம். சுமாராக இருக்கும் ஒருவன் தன்னை சூர்யா போல நினைத்துக் கொள்கிறான்.அவனை விருப்பும் உள்ளூர் பெண்களை எல்லாம் ஒதுக்குகிறான். ஒரு அழகியைத்தான் திருமணம் செய்வது என்று இருக்கிறான். அப்படி ஒரு அழகியையும் சந்திக்கிறான். அவனை அவள் மதிக்கவில்லை. அவர்களுக்குள் காதல் வருகிறதா? எப்படி அவள் மனதில் இடம் பிடிக்கிறான் என்பதே கதை.
டைரக்டர் கே.பாக்யராஜ் பாணியில், இன்றைய இளைய தலைமுறையினரின் ரசனைக்கேற்றவாறு திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. கதாநாயகியாக நேகா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் மதன்பாப், லொள்ளு சபா பாபு, அனுராதா கிருஷ்ணமூர்த்தி, சம்பத், கே.பி.சிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி