தூத்துக்குடி:-தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுமி நேற்று மாலை அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே விளையாடி கொண்டிருந்தாள்.அந்த சமயத்தில் அங்கு கீழசெய்தலை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் தங்கத்துரை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 8ம் வகுப்பு மாணவனான அவன் சிறுமியை அருகே உள்ள முள்புதருக்கு தூக்கி சென்று பலாத்காரம் செய்தான்.
அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் பள்ளி மாணவனை பிடிக்க முயன்றனர். ஆனால் அவன் தப்பி ஓடிவிட்டான். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் எப்போதும் வென்றான் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பள்ளி மாணவன் தங்கத்துரையை கைது செய்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி