செய்திகள்,திரையுலகம் திருமணத்திற்கு புடவை, நகைகள் வாங்கினார் அமலாபால்!…

திருமணத்திற்கு புடவை, நகைகள் வாங்கினார் அமலாபால்!…

திருமணத்திற்கு புடவை, நகைகள் வாங்கினார் அமலாபால்!… post thumbnail image
சென்னை:-அமலாபாலுக்கும் டைரக்டர் விஜய்க்கும் வருகிற 12ம் தேதி சென்னை சாந்தோமில் உள்ள ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. முன்னதாக 7ம் தேதி கொச்சியில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. விஜய் இந்து மதத்தை சேர்ந்தவர். அமலாபால் கிறிஸ்தவ மதம். எனவே இரண்டு மத முறைப்படியும் திருமண சடங்குகளை நடத்த உள்ளனர். நிச்சயதார்த்தத்தை கிறிஸ்தவ முறையில் நடத்துகிறார்கள்.

இது குறித்து அமலாபால் தாய் கூறும்போது, கிறிஸ்தவ பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயதார்த்தத்தில் அமலாபால் வெள்ளை நிற கவுன் அணிவார். இந்த கவுனை டிசைனர் அனிதா தயார் செய்துள்ளார். அத்துடன் வைர நெக்லசும் அணிந்து கொள்வார் என்றார். திருமணம் இந்து பாரம்பரிய முறையில் நடக்கிறது. இதில் அமலாபால் சிவப்பு நிற காஞ்சீபுரம் பட்டுபுடவை அணிந்து கொள்கிறார். திருமணத்துக்கான ஆடைகள் நகைகள் வாங்கும் பணியில் அமலாபால் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். நிச்சயதார்த்தம், திருமணம் மற்றும் திருமண வரவேற்புக்கு என தனித்தனி நகை மற்றும் ஆடைகள் வாங்குகிறார்.

அமலாபால் கைவசம் மிலி என்ற மலையாள படம் மட்டுமே உள்ளது. இதை திருமணத்துக்கு முன்னதாக முடித்து கொடுத்து விடுகிறார். வேறு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தும் மறுத்து விட்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி