செய்திகள்,முதன்மை செய்திகள் அப்துல் கலாமுக்கு கவுரவ பட்டம் வழங்கிய எடின்பர்க் பல்கலைக் கழகம்!…

அப்துல் கலாமுக்கு கவுரவ பட்டம் வழங்கிய எடின்பர்க் பல்கலைக் கழகம்!…

அப்துல் கலாமுக்கு கவுரவ பட்டம் வழங்கிய எடின்பர்க் பல்கலைக் கழகம்!… post thumbnail image
லண்டன்:-இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு ஸ்காட்லாந்தின் புகழ்பெற்ற எடின்பர்க் பல்கலைக் கழகம் கவுரவ பட்டம் வழங்கியது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக கடந்த 15ம் தேதி இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவை 2020ல் வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு உதவி செய்து வருவதையும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதையும் அங்கீகரித்து பல்கலைக் கழகத்தின் முதல்வரும் துணைவேந்தருமான திமோதி ஓஷியா இந்த பட்டத்தை கலாமுக்கு வழங்கினார் என்று கூறப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசு தலைவராக பதவி வகித்த அப்துல் கலாம், இந்தியாவின் கிராமப்புற ஏழ்மை நிலை தொடர்பாக பிரச்சாரம் செய்வதுடன் சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை போக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி