ராயல் ஆஸ்திரேலியன் ஏர் போர்ஸ் நிறுவனத்தில் விமான மெக்கானிக்காக பணிபுரிந்த பிரபாம் 1950களின் நடுவில் தனது படிப்பை தொடர பிரிட்டனுக்கு சென்றார். அதற்கு முன்பாகவே, 1948ல் ஆஸ்திரேலியாவின் பந்தயப்பாதைகளில் மிட்ஜெட் வகை கார்களை இயக்கியவர்.1959ல் சிப்ரிங்கில் நடைபெற்ற அமெரிக்க கிராண்ட் பிரிக்ஸில் உலக சாம்பியன் பட்டம் பெறும் முதல் ஆஸ்திரேலியாராக பிரபாம் புதிய சாதனை படைத்தார். இரண்டாவதாக, 1960ல் கூப்பர் நிறுவனத்திற்காக ‘ஃபார்முலா-ஒன்’ போட்டியில் பங்கேற்ற பிரபாம் மறுபடியும் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
அதன் பிறகு அவரது நண்பருடன் அதிநவீன பந்தயக் கார்களை தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கினார். கூப்பர் நிறுவனம் மறுஅறிமுகம் செய்த மிட்ஜெட் வடிவமைப்பு தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்தினார்.1920, 1930களில் நடைபெற்ற ஐரோப்பிய கார் பந்தய போட்டிகளே பார்முலா-1 போட்டிகளின் முன்னோடிகளாக இருந்தன. இரண்டாம் உலகப் போரின் போது போட்டிகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டு அதன் பின்னர் சில வருடங்கள் கிராண்ட் ஃபிரி அல்லாத போட்டிகள் நடத்தப்பட்டன.
உலக கார் பந்தய அமைப்பான எப்.ஐ.ஏ விதிமுறைகளை உருவாக்கிய பின் ‘ஃபார்முலா-ஒன்’ போட்டிகள் முதல் முறையாக 1950ல் இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சுற்றில் நடந்தது.
தனது வாழ்நாளில் 126 கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளில் கார்களை ஓட்டியுள்ள பிரபாம் 23 முறை போல் பொசிசன்களையும், 14 முறை வெற்றியும் பெற்றுள்ளார்.
ஓய்வுக்காலத்திற்கு பின் பிரபாம் தனது சொந்த அணியை விற்றுவிட்டு மோட்டார் ஸ்போர்ட் சேவைகளை செய்து வந்தார். 1990 வரை பந்தயங்களில் பிரபாமின் கார்கள் வலம் வந்திருக்கின்றன.தன்னுடைய பெயரிலான, தானே உருவாக்கிய பந்தயக்காரில் போட்டியிட்டு உலக சாம்பியன் பட்டம் வென்ற ஒரே ‘ஃபார்முலா-ஒன்’ சாம்பியன் ஜாக் பிரபாம் மட்டுமே.என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி