செய்திகள்,முதன்மை செய்திகள் கொலம்பஸ் பயணம் செய்த கப்பலின் சிதைவு கண்டுபிடிப்பு!…

கொலம்பஸ் பயணம் செய்த கப்பலின் சிதைவு கண்டுபிடிப்பு!…

கொலம்பஸ் பயணம் செய்த கப்பலின் சிதைவு கண்டுபிடிப்பு!… post thumbnail image
மியாமி:-இத்தாலியில் பிறந்த கொலம்பசின் கனவு கடல் கடந்து சென்று பல்வேறு தேசங்களையும் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான். இதற்காக 500 ஆண்டுகளுக்கு முன் அவர் மூன்று கப்பல்களில் பயணம் செய்தார். இந்த பயணத்தின் போதுதான் அவர் அமெரிக்காவை கண்டுபிடித்தார்.

இதனால் அவர் வரலாற்று நாயகன் என்று இன்றளவும் பாராட்டப்படுகிறார்.
இந்த பயணத்தின்போது அவர் பயன்படுத்திய கப்பல்களில் ஒன்று சாந்தா மரியா.இந்த கப்பலின் சிதைவு என்று நம்பக்கூடிய ஒரு சிதைந்த பாகம், கரீப்பியன் தீபகற்பத்தில் அடங்கியுள்ள ஹைதி நாட்டின் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடல் மட்டத்தின் கீழே உள்ள கற்பாறை ஒன்றின் அருகில் 10-15 அடி ஆழத்தில் இந்த சிதைவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவலை வெளியிட்ட மஸ்சாசூசெட்ஸ் கடல் ஆராய்ச்சியாளர் கிளிப்போர்டு, சாந்தா மரியா கப்பலின் சிதைவு என இந்த சிதைவை நம்புவதற்கு ஆதாரங்கள் உள்ளன. இதை முழுமையாக தோண்டிப்பார்த்து ஆராய்கிறபோது, அது அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்ததற்கு தொல்லியல் சார்ந்த ஆதாரமாக அமையும் என கூறி உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி