அந்த பெண்ணின் உண்மையான பெயர் சாரிட்டி ஆன் ஜான்சன். தான் ஒரு அநாதை என அவர் கூறியுள்ளார். அவர் செய்த முறைகேடுகள் தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், கடந்த அக்டோபரில் பாதுகாவலர் ஒருவருடன் சாரிட்டி வந்தார். தனக்கு 15 வயது என கூறிய அந்த பெண் தனது பெயரை சாரிட்டி ஸ்டீவன்ஸ் என பள்ளியில் பதிவு செய்து கொண்டார் என தெரிவித்துள்ளது.அதேவேளையில் அவருடன் வந்த பாதுகாவலரான டமிகா லிங்கன் என்பவர் போலீசாரிடம் கூறுகையில், சாரிட்டியின் தந்தை அவரை தவறாக பயன்படுத்தி வந்ததாகவும், சாரிட்டியின் பெற்றோர் தற்பொழுது மரணமடைந்து விட்டதாகவும் அதனால் தான் அநாதையாக இருப்பதாகவும் என்னிடம் கூறினார். நாங்கள் இருவரும் ஒன்றாக பணிபுரியும் மெக்டொனால்டு நிறுவனத்தில் வைத்து தான் அவரை தெரிய வந்தது.
அவருடனான அறிமுகத்தின்போது பெற்றோரை இழந்து விட்டதால் தனக்கு யாரும் இல்லை என கூறியதாக டமிகா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சாரிட்டியை குழந்தையாக கருதி தனது வீட்டிற்கு டமிகா அழைத்து சென்றுள்ளார். அவருக்கு ஆடைகள் வாங்கி கொடுத்துள்ளார். தலைமுடியை கூட வாரி விட்டுள்ளார். பள்ளியில் படிக்கையில் ஒரு குழந்தையைபோல் சாரிட்டி நடந்து கொண்டுள்ளார்.தனது பாடத்தை ஒழுங்காக படித்தார். ரேங்க் கார்டில் நல்ல மதிப்பெண்களை பெற்றார். இத்தனைக்கும் தன்னை விட 4 வயது மூத்தவர் என்பது டமிகாவுக்கு தெரியவில்லை. குழந்தைகள் பாதுகாப்பிற்கு உதவி செய்யும் நிறுவனத்தின் தலைவர் ஒருவர் தொலைபேசி வழியே போன் செய்துபொழுது டமிகாவுக்கு அழைப்பு சென்றுள்ளது. அந்த அமைப்பில் சேர சாரிட்டி முயற்சி செய்துள்ளதை அடுத்து பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இந்த முறை சற்று யோசித்த டமிகா தான் வேலை செய்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு சாரிட்டியின் முழு விவரத்தை விசாரித்துள்ளார். அதில், சாரிட்டியின் உண்மை விவரம் கிடைத்துள்ளது. சாரிட்டி படித்த பள்ளி கூட சான்றிதழில் அவரது பிறந்த வருடம் 1979 என காட்டியது. அவரது பெயர் உண்மையில் சாரிட்டி ஜான்சன் என்றும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசாரை தொடர்பு கொண்டு டமிகா தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த சாரிட்டியின் ஆசிரியர்கள் அழுதுள்ளனர். மாணவர்கள் அழுதுள்ளனர். சாரிட்டியின் நெருங்கிய தோழியால் இதனை நம்ப முடியவில்லை. டமிகாவின் புகாரை அடுத்து அதிகாரிகள் சாரிட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு அவர், தனது பெயர் சாரிட்டி ஸ்டீவன்ஸ் என கூறியுள்ளார்.அவரால் உண்மையான விவரங்களை தெரிவிக்க முடியவில்லை.இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அவர் 500 அமெரிக்க டாலர் பிணை தொகையுடன் கிரெக் நகர சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது போலியான பேஸ்புக், டுவிட்டர் போன்ற வலைதள கணக்கில் சாரிட்டி பெயரை பயன்படுத்தி உள்ளார்.
அந்த புகைப்படங்களில், ஜான்சன் வெட்கம் நிறைந்த, புத்துணர்ச்சி மிக்க முகம் கொண்டதுடன், தலைவாரி மிக அழகாக காட்சி அளித்தார். தற்பொழுது, சிறையில் உள்ள உடையுடன் 34 வயதுக்கு குறையாத பெண்ணாக, உப்பிய முகத்துடன், விரித்து போடப்பட்ட தலைமுடியுடன் அவர் காட்சி அளிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி