இந்த விழாவில் பிரபல நடிகைகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நிகழ்ச்சியில் இன்றும், வரும் 21ம் தேதியும் இந்த சிவப்பு கம்பள வரவேற்பு நடைபெறுகின்றது. ஆனால் இதற்காக கேன்ஸ் செல்லும் ஐஸ்வர்யா ராய் இந்த முறை முதல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
லண்டனிலிருந்து நைஸ் நகரத்திற்கு செல்லும் இணைப்பு விமானத்தில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால் அவரால் குறிப்பிட்டபடி கேன்ஸ் வந்துசேர முடியவில்லை. இதனை அறிந்த லோரியல் நிறுவனத்தினர் ஐஸ்வர்யா ராய்க்கென மறுமுறை இந்த நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். வரும் 21ம் தேதி குறிப்பிட்டபடி அனைவருடனும் இதில் பங்கேற்கும் ஐஸ்வர்யாவிற்கு அதற்குப் பின்னர் மீண்டும் ஒரு நாள் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி