சென்னை:-சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 125கோடியில் தயாரான படம் ‘கோச்சடையான்’. இதில் மோஷன் கேப்சர் 3டி தொழில்நுட்பம் எனும் நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பத்தில் நடித்துள்ள முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் ரஜினி.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். படத்தை தமிழ், தெலுங்கு. இந்தி, போஜ்புரி, பஞ்சாபி, மராட்டி என 6 மொழிகளில் தயாரித்துள்ளனர். மேலும், ஜப்பானில் ரஜினி படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருவதால் ஜப்பான் மொழியிலும் டப்பாகும் கோச்சடையான், பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளிலும் அடுத்து டப்பாக உள்ளதாம்.இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கோச்சடையான் படம் திரையிடப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி