சென்னை:-நடிகர் ஜெய் நடித்துள்ள திருமணம் எனும் நிக்காஹ் படம் விரைவில் வெளியாக உள்ளது.அதற்கு அடுத்து வடகறி ரிலீசாகிறது. இதுதவிர எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆண்ட்ரியா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்நிலையில் ஜெய் எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி விரைவில் நானும் தயாரிப்பாளராக போகிறேன். வேறு ஹீரோக்கள் நடிப்பில் படம் எடுக்கப்போகிறேன். எல்லோரும் என்னை வாழ்த்துங்கள் என்று தனது டுவிட்டரில் எழுதியிருக்கிறார்.
ஜெய் தற்போது நடித்து வெளிவர இருக்கும் திருமணம் எனும் நிக்காஹ், மற்றும் வடகறி படங்களில் அவர் சோலோவாக நடித்துள்ளார். அர்ஜுனன் காதலி, தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படங்கள் முடிந்தும் வெளிவராமல் இருக்கிறது. இந்த நிலையில் ஜெய் தயாரிப்பாளர் அவதாரம் எடுப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி