அவர் தற்கொலை செய்துகொண்டதாக பத்திரிகை ஒன்றிற்கு அவரது சகோதரர் ஜோகர் பென்ட்ஜெல்வுல் தெரிவித்தபோதிலும் தனிப்பட்ட முறையில் இந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை என்று தெரிகின்றது.சிறிது காலமாகவே தனது சகோதரர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் அவரது இறப்பு ஒரு தற்கொலை என்று உறுதி செய்யப்படமுடியும் என்றும் ஜோகர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மாலிக்கின் தயாரிப்பான ‘சர்ச்சிங் பார் சுகர்’ ஒரு மர்மத் திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது. திடீரென பொதுமக்கள் பார்வையில் காணாமற்போன அமெரிக்கப் பாடகரான சிஸ்டோ ரோட்ரிகியுயசைத் தேடி இரண்டு தென்னாப்பிரிக்கப் பத்திரிகையாளர்கள் பயணிப்பதை இந்தத் திரைப்படம் வெளிப்படுத்தியிருந்தது. அமெரிக்காவில் புகழ் பெறாத அந்தப் பாடகர் தென்னாப்பிரிக்காவில் மிகவும் பிரபலமாக விளங்கினார் என்று குறிப்பிடுவதாக கதை அமைந்திருந்தது.மாலிக்கின் இந்தத் திரைப்படம் சன்டான்ஸ் திரைப்பட விழாவுக்கு வந்திருந்த பல அமெரிக்க இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களிடம் பாராட்டைப் பெற்றது. இவர் மரண செய்தியை அறிந்த மற்ற திரைத்துறையினர், கதைகள் சொல்ல உலகத்தைத் துரத்தியவர் என்று இவருக்குப் புகழஞ்சலி செலுத்தினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி