சென்னை:-சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியாகியிருக்கும் முதல் படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. இந்த படத்தில் ஹீரோக்களைப்போன்று ஓப்பனிங் பாடலோடு என்ட்ரி கொடுத்தார் சந்தானம். பாடல் காட்சிகளில் நடனத்திலும் பின்னி பெடலெடுத்து விட்டார்.
இந்நிலையில் தனது முதல் படத்தை வெற்றிப்படமாக்கி விட வேண்டும் என்பதற்காக இப்போது தமிழகத்திலுள்ள முக்கிய தியேட்டர்களுக்கு நாயகி ஆஷ்னாவுடன் இணைந்து விசிட் போகிறாராம் சந்தானம்.இதற்கிடையே இப்படத்தை தயாரித்துள்ள பிவிபி நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்கவும் இப்போது சந்தானத்துககு அட்வான்ஸ் கொடுத்துள்ளார்களாம். இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார் சந்தானம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி