செய்திகள்,திரையுலகம் தமிழ் படத்தில் உக்ரைன் நாட்டு அழகியின் பெல்லி டான்ஸ்!…

தமிழ் படத்தில் உக்ரைன் நாட்டு அழகியின் பெல்லி டான்ஸ்!…

தமிழ் படத்தில் உக்ரைன் நாட்டு அழகியின் பெல்லி டான்ஸ்!… post thumbnail image
சென்னை:-மாற்றுத்திறனாளி ஒருவரின் மனைவி அழகுப்பதுமை. அந்த அழகு பதுமையை அடைய பலநாள் திட்டம் போட்டான் ஒருவன். அந்த நாளும் வந்தது. காரியத்தை கனகச்சிதமாக முடிக்க நினைத்து வீட்டிற்குள் நுழைந்தான் அவன். மரண பயத்தில் மனைவி. அவளை காப்பாற்ற மாற்றுத்திறனாளி கையாண்ட விதம்.என கொஞ்சம் பதைபதைக்க காட்சிகள் நகரும் வண்ணம் உருவாகி வரும் படம் ‘ஒளிச்சித்திரம்’.

இப்படத்தை ‘சிங்காரவேலன்’, ‘எஜமான்’, ‘சின்னக்கவுண்டர்’, ‘கிழக்கு வாசல்’ ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அப்துல் ரகுமான் என்பவர் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.மேலும் இப்படத்தில் விஷ்வா, காம்னா சிங், ஆதவா, ரமேஷ், தலைவாசல் விஜய், லயன் நாகராஜ், ஜவகர், ஜெய்ஸ்ரீ, மெர்க்குரி சத்யா ஆகியோருடன் உக்ரைன் நாட்டு அழகி இரினா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஹேனி சினி கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனமும், ஹனி டியூ பிலிம் கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஆர்.வெங்கட், ஆர்.மகேஷ் கூட்டாக தயாரிக்கின்றனர். சௌந்தர்யன் இசையமைக்கிறார். பி.ஜி.வெற்றி ஒளிப்பதிவை கவனிக்கிறார்.இப்படத்திற்காக உக்ரைன் நாட்டு அழகி இரினா ஆடிய பெல்லி நடனத்திற்காக கோவளம் அருகே அரங்கம் அமைத்து படமாக்கியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி