செய்திகள்,முதன்மை செய்திகள் சென்னையில் 5 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!…

சென்னையில் 5 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!…

சென்னையில் 5 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!… post thumbnail image
சென்னை:-சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 12 மணி அளவில் மர்ம ஆசாமி பேசினார். வாக்கு எண்ணும் மையங்களான அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, ராணிமேரி கல்லூரி மற்றும் சென்னை அரசு ஆஸ்பத்திரி உள்பட 5 இடங்களில் நாளை காலை 10 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.அதிர்ச்சி அடைந்த போலீசார் இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரித்தனர்.

அந்த எண் குரோம் பேட்டையை சேர்ந்த த.மு.மு.க. பிரமுகரின் அடையாள அட்டை கொடுக்கப்பட்டு அவரது வீட்டு முகவரியில் வாங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அவரிடம் போலீசார் விசாரித்த போது குறிப்பிட்ட செல்போன் எண்ணை வாங்கவில்லை என்று கூறினார். எனவே மர்ம ஆசாமி த.மு.மு.க. பிரமுகரை சிக்க வைக்க அவரது பெயரில் போலி அடையாள அட்டை கொடுத்து செல்போன் எண் வாங்கி இருப்பது தெரிந்தது. மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து சென்னை அரசு ஆஸ்பத்திரி, அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி உள்பட 5 இடங்களிலும் இன்று காலை ஏராளமான போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு நிபுணர்கள் அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.இதை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாக்குப் பதிவு எண்ணிக்கை முடியும் வரை அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். போலீசாரின் திடீர் சோதனையால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடந்த 1ம் தேதி கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் ஆந்திராவை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி பலியானார். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் உள்ள வணிக வளாகங்கள், ரெயில் நிலையம், பள்ளி, கல்லூரிக்கு மர்ம ஆசாமிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்ட்ரல் ரெயில் நிலைத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெங்களூரை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.பொது மக்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி