தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கப்போகின்றது என இவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்ததில் இரு தலைகளுடன் கூடிய சமச்சீரான முகங்களும், ஓருடலும் கொண்ட பெண் குழந்தைகள் கருவில் இருப்பது தெரிந்தது. குழந்தைகளின் வடிவத்தை பார்த்து மருத்துவர்கள் அதிர்ந்தாலும் தம்பதியர் இருவரும் எந்த வித அதிர்ச்சியும் இன்றி கடந்த 8ம் தேதி தங்கள் பெண் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்த அக்குழந்தைகளுக்கு பெய்த் என்றும், ஹோப் எனவும் அத்தம்பதியர் பெயர் வைத்துள்ளனர். இரு மூளைகள் மற்றும் ஒரு மூளை தண்டுடன் இக்குழந்தைகள் பிறந்துள்ளன. எங்கள் குழந்தைக்கு ஒரு உடல் மட்டுமே இருந்தாலும் நாங்கள் அவர்களை இரட்டையர் என்று தான் அழைப்போம். அந்த அளவுக்கு நாங்கள் அவர்களை விரும்புகிறோம் என அத்தம்பதியர் தெரிவித்தனர்.தற்போது மருத்துவமனையில் இருக்கும் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச்செல்ல இருவரும் ஆர்வத்துடன் உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி