நீங்கள் எப்போது கால்சீட் கேட்டாலும் தரத்தயாராக இருக்கிறேன் என்று இப்போதுவரை டைரக்டர் பிரபாகரனுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார் லட்சுமிமேனன். அதனால் அடுத்தபடியாகவும் உதயநிதியை வைத்து ஒரு படம் இயக்க கதை தேடலில் ஈடுபட்டிருக்கும் பிரபாகரன் அந்த படத்தில் லட்சுமிமேனனை நடிக்க வைத்துவிட வேண்டும் என்று அவரையும் மனதில் கொண்டு கதை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமின்றி ஒருவேளை உதயநிதி பேக் அடித்து விட்டால் வேறு கம்பெனிக்காவது அடுத்த படத்தை உடனடியாக தொடங்கி விட வேண்டும் என்று நினைக்கும் எஸ்.ஆர்.பிரபாகரன் தான் சந்திக்கும தயாரிப்பாளர்களிடம் ராசியான நடிகை லட்சுமிமேனனின் கால்சீட் பாக்கெட்டில் இருக்கிறது. அதனால் எந்த ஹீரோவை வைத்து படம் பண்ண சொன்னாலும படம் இயக்க நான் தயார் என்றும் கூறி வருகிறார் பிரபாகரன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி